மத்திய தொலை தொடர்பு துறையில் 51 காலியிடங்கள்
நமது நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் மத்திய அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள ஒயர்லெஸ் அதிகாரிகள் பதவியில் 51 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு வெளியிட்டுள்ளது. வயது: ஜூனியர் ஒயர்லெஸ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கை எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் அல்லது ரேடியோ கம்யூனிகேஷனுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்சி., இயற்பியல் படிப்புடன் இதே சிறப்புப் படிப்புகளைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.கடைசி நாள் : 2017 ஜூன் 7. விபரங்களுக்கு: http://sscnr.net.in/newlook/downloads/2017/notice_8517.pdf