உள்ளூர் செய்திகள்

வங்கியில் 550 காலியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 130, கர்நாடகா 50, உ.பி., 41, மஹாராஷ்டிரா 29, தெலுங்கானா 29, கேரளா 25, மேற்கு வங்கம் 22, குஜராத் 22, ம.பி., 2 உட்பட மொத்தம் 550 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.வயது: 20-28 (1.8.2024ன் படி)ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 708.கடைசிநாள்: 10.9.2024விவரங்களுக்கு: bfsissc.com/IOB.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !