நிலக்கரி நிறுவனத்தில் 667 மைனிங் காலியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் (எம்.சி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் ஓவர்மேன் 192, மைனிங் 448, சர்வேயர் 24 உட்பட மொத்தம் 667 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிப்ளமோ வயது: 18-30 (6.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 6.4.2026 விவரங்களுக்கு: mahanadicoal.in