உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில் கான்பூர், லக்னோ 125, கோல்கட்டா 90, புதுடில்லி 61, கவுகாத்தி 52, பாட்னா 37, மும்பை 33, சென்னை 9 உட்பட மொத்தம் 572 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தாய்மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். வயது: 18-25 (1.1.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உட்பட 15 இடங்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50 கடைசிநாள்: 4.2.2026 விவரங்களுக்கு: opportunities.rbi.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !