வருமான வரித்துறையில் உதவியாளர் பணி
நமது நாட்டின் வருவாயை உறுதி செய்யும் பணியை வருமான வரித்துறை செய்கிறது. அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள துறை என்பதால் இந்தத்துறைக்கு கூடுதல் கவுரவங்கள் உள்ளது. எனவே இத்தகைய துறையில் பணிபுரிவது இன்றைய இளைஞர்களின் கனவாகவே உள்ளது. பெருமைக்குரிய வருமான வரித்துறையில் தற்சமயம் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: வருமானவரித்துறையில் இந்த சிறப்பு பணி நியமனங்களின் மூலம் 9 இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர், 19 டாக்ஸ் அசிஸ்டென்ட், 1 கிரேடு II ஸ்டெனோ, 29 எம்.டி.எஸ்., எனப்படும் மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் ஆகியவற்றில் மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.விளையாட்டு பிரிவுகள்: அதெலடிக்ஸ், கபடி, கால்பந்து, பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஹாக்கி போன்ற விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனம். வயது: 10.06.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: இன்ஸ்பெக்டர் பதவிக்கு பட்டதாரிகளும், டாக்ஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு பட்டப் படிப்புடன் டேட்டா என்ட்ரி சிறப்பு தகுதி கொண்டவர்களும், ஸ்டெனோகிராபர் பதவிக்கு பிளஸ் 2 படிப்புடன் ஸ்டெனோகிராபி தகுதியும், மல்டி டாஸ்கிங் அசிஸ்டென்ட் பதவிக்கு பிளஸ் தகுதியும் தேவைப்படும்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை நிரப்பி, உரிய ஆவணங்களைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Asstt. Commissioner of Income Tax, (Hqrs-Personnel)(Non-Gazetted), Room No : 376, C.R Estate, I.P Estate, New Delhi - 110 002.கடைசி நாள்: 2017 ஜூன் 30.விபரங்களுக்கு: www.sarkariexaam.com/wp-content/uploads/2012/06/itd.jpg