அழைக்கிறது உயிரியல் மையம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐதராபாத்தில் உள்ள 'செல்லுலர் & மூலக்கூறு உயிரியல் மையத்தில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னீசியன்' பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ., வயது: 18-28 (23.2.2026ன் படி) தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Section Officer (Recruitment Section), CSIR- Centre for Cellular and Molecular Biology, Uppal Road, Habsiguda, Hyderabad - 500 007, Telangana விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.2.2026 விவரங்களுக்கு: ccmb.res.in