உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது கடலோர காவல்படை

இந்தியாவின் கடலோர எல்லைகளில் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் கடலோரக் காவல் படை (இந்தியன் கோஸ்ட் கார்டு). பாதுகாப்புப் படைகளில் தனி இடத்தைக் கொண்டுள்ள இப்படை, நீர்வழி மற்றும் ஆகாய வழி என்ற இரண்டு வகையிலும் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இந்தப் படையில் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி (பைலட்) பதவிகளுக்கு பி.இ./பி.டெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பைலட்(சி.பி.எல்) பதவிக்கு பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சி.பி.எல் லைெசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2017 ஜூலை 2 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். முழுமையான விபரங்களுக்கு www. joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். கடைசிநாள் : 2017 ஜூலை 2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !