உள்ளூர் செய்திகள்

டயட்டீசியன் படிப்புக்கு மத்திய அரசு வேலை

மத்திய அரசின் காலியிடங்களை நிரப்புவதில் பெயர் பெற்ற ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு டயட்டீசியன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 34 டயட்டீசியன் உள்ளிட்ட இதர இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: விண்ணப்பிப்பவர்கள் 18 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: புட் நியூட்ரிஷன் அல்லது டயட்டிக்ஸ் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முதுநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் இரண்டு வருட காலத்திற்கு மருத்துவமனை அல்லது மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஹோம் சயின்ஸ் பிரிவில் பட்டம் முடித்து அதன் பின்னர் டயட்டிக்ஸ் டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்களும் மருத்துவமனை அல்லது மருத்துவ நிறுவனத்தில் இரண்டு வருட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கட்டணம்: ரூ.100.கடைசி நாள் : 2017 ஜூன் 7. விபரங்களுக்கு: http://www.sscwr.net/noticeboard/Advt.%20No.WR-01-2017-Notice%20%20Phase-IV.pdf?ID=1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !