ADDED : ஆக 27, 2012 | ADDED : ஆக 27, 2012
விஜயா வங்கி பொதுத் துறையில் இயங்கி வரும் இந்திய வங்கிகளில் முதல் தலைமுறையைச் சார்ந்த வங்கியாகும். இந்த வங்கிக்கு பெங்களூருவில் தலைமை அலுவலகம் உள்ளது. விஜயா வங்கிக்கு நாடு முழுவதும் 1169 கிளைகளும் இதர அலுவலகங்களும் உள்ளன. இந்த வங்கியில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த வங்கியில் நாடு முழுவதும் உள்ள 800 கிளரிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவற்றில் தமிழ் நாட்டில் 53 காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்:
விஜயா வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2012 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், ப்ளஸ்டூ அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், டிப்ளமோ இன் பேங்கிங் படிப்பை முடித்தவர்களும், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பை மேற்கொண்டு முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. மேற்கண்ட கல்வித் தகுதியுடன் கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய பொது நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்களில் பொதுப் பிரிவினராக இருந்தால் மொத்த மதிப்பெண்கள் 146ம், ஓ.பீ.சி., பிரிவினராக இருந்தால் மொத்த மதிப்பெண்கள் 141ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் மொத்த மதிப்பெண்கள் 111ம் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஒவ்வொரு பிரிவிலும் நிபந்தனைகளின்படி குறைந்த பட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மற்றவை:
விஜயா வங்கியின் புரொபேஷனரி கிளர்க் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை செலுத்துவதற்கான சலானை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இந்த வங்கியின் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :
05.09.2012
இணையதள முகவரி: