.இஸ்ரோவில் பணிபுரிய ஆசையா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம்மால் ஐ.எஸ்.ஆர்.ஓ., என்ற பெயராலேயே பெரிதும் அறியப்படுகிறது. சமீபத்தில் கூட உலக சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது. இந்த நிறுவனத்தில் சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் : பி.இ., 001 சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் துறையில் 42 இடங்களும், பி.இ., 002 சார்ந்த மெக்கானிக்கலில் 36 இடங்களும், பி.இ., 003 சார்ந்த கம்ப்யூட்டர் சயின்சில் 9 இடங்களும் சேர்த்து மொத்தம் 87 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : 07.03.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த வருடம் பட்டப் படிப்பை முடிக்க இருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/-ஐ இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கலாம்.தேர்வு மையங்கள் : இந்த எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னையிலும், நமது அருகிலுள்ள மாநில மையங்களான திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இதர மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 2017 மார்ச் 7.விபரங்களுக்கு : http://www.isro.gov.in/recruitment-to-post-of-scientist-engineer-%E2% 80%98sc%E2%80%99-disciplines-of-electronics-mechanical-and-computer