உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி., பணிவாய்ப்பு

தமிழக அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் பெயர் பெற்ற டி.என்.பி.எஸ்.சி., நிறுவனம் தற்போது தமிழக அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள மண்ணியல் தொடர்புடைய இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.காலியிட விபரம்: ஜியாலஜி மற்றும் மைனிங் துறைகளில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்டில் 25ம், பி.டபிள்யூ.டி.,யில் காலியாக உள்ள அஸிஸ்டென்ட் ஜியாலஜிஸ்டில் 15ம், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் துறையில் உள்ள அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்டில் 10ம், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள ஜியாலஜிஸ்டில் 3ம் காலியிடங்கள் உள்ளன.வயது: இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொதுப் பிரிவினராக இருந்தால் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் துறைக்கு விண்ணப்பிக்க ஜியாலஜியில் பட்டப் படிப்பு தேவை. இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஜியாலஜியில் முது நிலைப் பட்டப் படிப்பு தேவைப்படும்.விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.50/-ம், எழுத்துத் தேர்வுக்காக ரூ.100/-ஐயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 மார்ச் 21.விபரங்களுக்கு: www.tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !