உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி.,யின் புள்ளியியல்உதவி இயக்குனர் பதவி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் 51 புள்ளியியல் உதவி இயக்குனர்களுக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்:

18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். புள்ளியியல் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொருளாதாரம், ஆபரேஷன்ஸ் ரிசர்ச், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், மேதமெடிக்கல் எகனாமிக்ஸ், எகனாமெட்ரிக்ஸ் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்து, இப்படிப்பில் புள்ளியியலை துணைப் பாடமாக முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். புள்ளியியல் தவிர்த்த மேற்கண்ட பிற பாடங்களில் முடித்தவர்களுக்கு புள்ளியியல் சார்ந்த முக்கிய பகுதிகளில் நல்ல திறன் இருக்க வேண்டும். இது குறித்த முழுத் தேவைகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதர விபரங்கள்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 600 முதல் ரூ.39 ஆயிரத்து 100 வரை ஊதியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே ஒரே தவணை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி தற்போது விலக்கு பெற விரும்புபவர்கள் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை வங்கிகள் மூலமாகவோ அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட தபால் நிலையங்கள் மூலமாகவோ செலுத்தலாம்.கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு நிலைகளில் இந்தத் தேர்வுக்கான தேர்ச்சி முறை இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திரு நெல்வேலி ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து, பின்னர் விண்ணப்பிக்கவும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்:

31.01.2013

கட்டணம் செலுத்த இறுதி நாள்:

02.02.2013

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:

24.02.2013

இணையதள முகவரி:

www.tnpsc.gov.in/notifications/1_2013_not_eng_ad_statistics.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்