உள்ளூர் செய்திகள்

ஆவடியில் பணிபுரிய விரும்புகிறீர்களா ?

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் ஹெவி வெகிக்கிள்ஸ் பாக்டரி நிறுவனமாகும். ஆர்டினன்ஸ் பேக்டரி போர்டின் கீழ் வரும் ஹெச்.வி.எப்., ஆவடியில் 306 செமி ஸ்கில்டு குரூப் சி இன்டஸ்ட்ரியல் எம்ப்ளாயிஸ் பிரிவில் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற என்.டி.சி., அல்லது என்.ஏ.சி., டிரேடு படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.50/-ஐ இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக நெட் பேங்கிங், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது சலான வாயிலாக எஸ்.பி.ஐ., வங்கியில் செலுத்தலாம்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள் : 26.06.2017விபரங்களுக்கு : http://www.ofb.gov.in/download/OFRC_IE2_2017.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !