டில்லி காவல்படையில் பணி புரிய வேண்டுமா
நம் நாட்டின் தலைநகரான புது டில்லியில் உள்ள போலீஸ் படை பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது. முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்படை பெருமைக்குரிய காவல் படையாகும். இதனாலேயே இந்தப் பணியிடங்களுக்கான நியமனத்தை ஸ்டாப் செலக்சன் அமைப்பு (எஸ்.எஸ்.சி.,) செய்கிறது. தற்சமயம் டில்லி காவல் படையில் காலியாக உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: சப்-இன்ஸ்பெக்டர் - ஆண்கள் பிரிவில் 616ம், பெண்கள் பிரிவில் 256 இடங்களும் உள்ளன. சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் பிரிவில் 786ம், சி.ஐ.எஸ்.எப்.,பில் 563 இடங்களும் காலியாக உள்ளன. எஸ்.எஸ்.சி., நடத்தும் இந்த தேர்வின் மூலம் 2221 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது: துணை ஆய்வாளர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: துணை ஆய்வாளர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 15விபரங்களுக்கு: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/FinalSICPO2017.pdf