குருபார்வை
பிளஸ் 2 முடித்துள்ள நான் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக விரும்புகிறேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்? - அரவிந்த், காஞ்சிபுரம் சிவில் சர்விசஸ் எனப்படும் குடியுரிமை தேர்வை எழுதுவதற்கு நீங்கள் பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எனவே தற்போது பட்டப்படிப்பை தேர்வு செய்யும் போது உங்களுக்கு விருப்பமான படிப்பாக தேர்வு செய்து படிக்கலாம். எம். பி. ஏ., சேர்க்கைக்கான 'மேட்' தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுவதாக அறிந்தேன். இதில் எந்த தேர்வில் நாம் கலந்து கொள்ளலாம்? - ராஜேஸ்வரி, புதுச்சேரிஎந்த தேர்விலும் கலந்து கொள்ளலாம். குறிப்பிட்ட தேர்வில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த கட்டுப்பாடுகளும் இல்லை..ஏர்லைன் நேவிகேஷன் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். என்ன படித்தால் இந்த துறையில் பணியில் சேரலாம்? ரவிச்சந்திரன், திருப்பூர்குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விமானத்தை பாதுகாப்பாக செலுத்தும் பணியில் இருப்பவர் நேவிகேஷன் துறையினர் தான். இன்றைய ஜி.பி.எஸ்., இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் போன்ற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நேவிகேஷன் நுட்பங்களை கையாளும் நேவிகேஷன் துறையில் நுழைய ஏர்கிராப்ட் ஆபரேஷன்ஸ், ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பாக தேர்வு செய்யலாம்.எனது மகனை இந்தியாவில் உள்ள காமர்ஸ் படிப்புக்கான சிறந்த கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறேன். நாட்டின் சிறந்த காமர்ஸ் கல்லூரிகள் சிலவற்றை கூறவும்.- சிவகுமார், விருதுநகர்குறிப்பிட்ட படிப்புக்கான சிறந்த கல்லூரியில் சேர்ப்பது நல்ல முடிவு என்பதில் சந்தேகமில்லை. எனினும் அனைவருக்கும் இது சாத்தியமாகாது. எந்த கல்லூரியில் எந்த படிப்பை படித்தாலும் அதை மிக ஆழமாகவும் முழுவதும் புரிந்து கொள்வதாகவும் படிப்பதே மாணவர்களை உயரங்களுக்கு எடுத்துச் செல்லும். பொதுவாக பொருளாதார குடும்ப சூழல்களுக்கேற்பவே நமது முடிவுகள் அமைய வேண்டும். என்றாலும் நீங்கள் கேட்ட தகவல் இதோ.* ஸ்ரீ ராம் காலேஜ் ஆப் காமர்ஸ், புதுடில்லி. * லேடி ஸ்ரீராம் காலேஜ் பார் வுமன், புதுடில்லி.* கிரைஸ்ட் பல்கலைக்கழகம், பெங்களூரு.* லயோலா கல்லூரி, சென்னை * ஹன்ஸ்ராஜ் கல்லூரி, புதுடில்லி* ஹிந்து கல்லூரி, புதுடில்லி.* அனில் சுரேந்திரா மோடி காலேஜ் ஆப் காமர்ஸ், மும்பை.