உள்ளூர் செய்திகள்

இஸ்ரோவில் பணியாற்ற விருப்பமா

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சர்வ தேச புகழ் பெற்றது. இந்த நிறுவனத்தில் சயின்டிஸ்ட் மற்றும் இன்ஜினியரிங் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: இஸ்ரோவின் சயிண்டிஸ்ட்/இன்ஜினியர் பிரிவிலான சிவிலில் 8ம், எலக்ட்ரிகலில் 6ம், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏர் கண்டிஷனிங்கில் 6ம், ஆர்க்கிடெக்சரில் 2ம், இதே பிரிவுகளைச் சார்ந்தவற்றில் உதிரியாக 4 இடங்களும் காலியாக உள்ளன. முழுமையான தகவல்களைப் பெற இந்த கழகத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.வயது: விண்ணப்பதாரர்கள் 14.03.2017 அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவு ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். ஏம்.எம்.ஐ.இ., கிராஜூவேட் ஐ.இ.டி.இ., பி.எஸ்.சி., இன்ஜினியரிங் முடித்தவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-ஐ ஆன்லைன் வாயிலாக இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.தேர்ச்சி முறை: தனி நபரின் கல்லூரி மதிப்பெண்கள், பயோ-டேட்டாவின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து முதல் கட்ட தேர்ச்சி இருக்கும். இதன் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். இதன் பின்னர், நேர்காணல், குழுவிவாதம் போன்ற முறைகளின் மூலமாக இறுதித் தேர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 மார்ச் 14. விபரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !