உள்ளூர் செய்திகள்

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை

தாமிரத்தை அதன் மூலப்பொருட்களில் இருந்து பிரித்தெடுப்பது, வார்ப்பது, சுத்தம் செய்வது, வடிவமைப்பது என்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாகும். இத்தகைய பணியை இந்தியாவிலேயே இந்த ஒரு நிறுவனம் மட்டும்தான் செய்கிறது மற்றொரு சிறப்பம்சமாகும். பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் இப்போது காலியாக உள்ள 42 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : பிட்டரில் 20, எலக்ட்ரீசியனில் 16, வெல்டரில் 3, மெஷினிஸ்டில் 1, டர்னரில் 2ம் சேர்த்து மொத்தம் 42 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பைக் குறைந்த பட்சம் 60சதவிகித மதிப்பெண்களுடன் 2014க்குப் பின்னர் முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Chief Manager (HR) - R&E, Indian Copper Complex, PO-Moubhandar, Pin 832103, District - East Singhbhum, Jharkhandகடைசி நாள் : 19.08.2017விபரங்களுக்கு : <http://www.hindustancopper.com/career.asp>


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !