வங்கியில் அதிகாரி வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு அதிகாரி பிரிவில் ஐ.டி., ஆபிசர் 82, சைபர் செக்யூரிட்டி 38, டிஜிட்டல் சப்போர்ட் 26, டிஜிட்டல் அப்ளிகேசன் 25, டேட்டா இன்ஜினியர் 15, டேட்டாபேஸ் அட்மின் 11, சாப்ட்வேர் டெவலப்பர் 6 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். வயது: 30-45 (31.1.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150 கடைசிநாள்: 23.3.2026 விவரங்களுக்கு: centralbank.bank.in