இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (இ.சி.ஐ.எல்.,)நிறுவனம் இந்திய அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டில் 1967ல் நிறுவப்பட்டது. நாட்டிற்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்திலேயே இது நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த நிறுவனம் கம்ப்யூட்டர், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ், கம்யூனிகேஷன் என்ற மூன்று அம்சங்களை மையப்படுத்தி இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 10 டெக்னிகல் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: இ.சி.ஐ.எல்., நிறுவன டெக்னிகல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இ.இ.இ., அல்லது இ.சி.இ., பிரிவு ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி முடித்தபின்னர் குறைந்த பட்சம் ஒரு வருட கால பணியனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஒரிஜினல் ஆவணங்களுடன் பின்வரும் மையத்தில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு செல்ல வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் இருந்து அறியவும். ECIL Zonal Office, B-7, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi-110 028.கடைசி நாள்: 2017 ஏப்., 15விபரங்களுக்கு: www.ecil.co.in/walkins.html