நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
சிவகங்கை மாவட்ட இ-கோர்ட்டில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஸ்டெனோ டைப்பிஸ்ட், டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டென்ட், டிரைவர், அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் என மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., ஆகிய படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பு, டைப்பிங்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி தேவைப்படும். ஸ்டெனோ பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஷார்ட் ஹேண்டு மற்றும் டைப்பிங்கில் ஹையர் கிரேடு தேர்ச்சி தேவைப்படும். டைப்பிஸ்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவுகளில் ஜூனியர் கிரேடு டைப்பிங் தேர்ச்சி தேவைப்படும். ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி தேவைப்படும். சீனியர் பெய்லி பதவிக்கும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி தேவை. முழுமையான தகவல்களை இணையதளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The District Judge, District Court, Sivagangai - 630 561கடைசி நாள் : 2017 ஜூலை 27. இணையதளம் : http://ecourts.gov.in/sites/default/files/Tamil%20-%20Recurtment-District%20Court-Svg_0.pdf