பிளஸ் 2 தகுதிக்கு ராணுவத்தில் வேலை
சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய ராணுவம் அதன் தொழில்நுட்பம், அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய வீரர்களின் சேவைக்காக போற்றப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஆண் விண்ணப்பதாரர்களுக்கான இடங்களை சம்பல்பூரில் நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வாயிலாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் : ஜெனரல் டியூடி சோல்ஜர், டெக்னிகல் சோல்ஜர், ஏ.எம்.என்., எக்சாமினர் சோல்ஜர், என்.ஏ., அண்டு என்.ஏ., டெக்னிகல் சோல்ஜர், கிளார்க்/ஸ்டோர்கீப்பர் சோல்ஜர், டிரேட்ஸ்மேன் சோல்ஜர் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்புக்கான முகாமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பதாரர்கள் 18- - 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.10.1996க்கு பின்னரும் 01.04.2000க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.கல்வித் தகுதி: ஜெனரல் டியூடி சோல்ஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 45 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்தவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் நிபந்தனையின்றி விண்ணப்பிக்கலாம். டெக்னிகல் சோல்ஜர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவியல் புலத்தில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏ.எம்.என்., எக்சாமினர் - டெக்னிகல் சோல்ஜர் பிரிவுக்கு விண்ணப்பிக்க அறிவியல் புலத்தில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் குறைந்த பட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிகல், எலக்ட்ரிகல், ஆட்டோமொபைல்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுகளில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டெக்னிகல் சோல்ஜர் - என்.ஏ., அண்டு என்.ஏ., பிரிவுக்கு டெக்னிகல் சோல்ஜர் தகுதி பெற்றவர்களும் பட்டப் படிப்பை அறிவியல் பிரிவில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கிளார்க்/ஸ்டோர்கீப்பர் சோல்ஜர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், அக்கவுண்ட்ஸ், புக்கீப்பிங் படிப்பை படித்தவராக இருக்க வேண்டும். டிரேட்ஸ்மேன் சோல்ஜர் பதவிக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: 22.05.2017 முதல் 28.05.2017 வரை சம்பல்பூரில் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு நாள்: 2017 ஜூலை 30. விபரங்களுக்கு: http://ordistportalcontent.nic.in/storeddata/results/ORIDHK_RESULTS_2017_6336.pdf