வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவி
தனியார் துறை வங்கிகளில் கே.வி.பி., எனப்படும் கரூர் வைஸ்யா வங்கியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி 100 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நவீன வங்கிச் சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை என்று பல்வேறு பெருமைகளைக் கொண்ட கே.வி.பி., சிறந்த தனியார் துறை வங்கி விருது பெற்ற வங்கியாகும். இந்த வங்கியில் தற்சமயம் புரொபேஷனரி அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 31.05.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு படிப்பை முழு நேரப் படிப்பாக படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 ஜூன் 19.விபரங்களுக்கு: http://ibps.sifyitest.com/kvblpos1jun17