இஸ்ரோவில் விஞ்ஞானி வாய்ப்பு
இஸ்ரோ - ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சயின்டிஸ்ட் இன்ஜினியர்' பிரிவில் இ.சி.இ., 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, சிவில் 7, அக்ரிகல்சர் 6, ஓசோனோகிராபி 8 உட்பட மொத்தம் 49 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.எஸ்சி., / எம்.இ., / எம்.டெக்., வயது: 18-30 (12.2.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750 கடைசிநாள்: 12.2.2026 விவரங்களுக்கு: sac.gov.in