ஏர் இந்தியாவில் மேற்பார்வையாளர் பணி
இந்தியாவிலுள்ள விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனம் புகழ் பெற்றது. இங்கு அசிஸ்டென்ட் சூபர்வைசர் பிரிவில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்களும், இதன் பின்னர் குறைந்த பட்சம் ஒரு வருட கால கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பை முடித்து டேட்டா என்ட்ரி / கம்ப்யூட்டர் ஆபரேஷனில் பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும். பி.சி.ஏ., பி.எஸ்சி., ஐ.டி., முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.The Personnel Department, Air India Engineering Services Limited, Northern Region A320 Avionics Complex IGI Airport, Terminal-Ii (Near New Custom House) New Delhi-110037. கடைசி நாள் : 2017 ஆக., 20. விபரங்களுக்கு : www.airindia.in/careers.htm