உள்ளூர் செய்திகள்

கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியராக வாய்ப்பு

மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. இதில் கான்பூரில் உள்ள பள்ளியில் காலியாக உள்ள பி.ஜி.டி., மற்றும் டி.ஜி.டி., பிரிவிலான இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: பி.ஜி.டி., பிரிவிலான கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் பி.இ. அல்லது பி.டெக்., படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.எஸ்.சி., அல்லது எம்.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் பி.ஜி.டி., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். டி.ஜி.டி., பிரிவிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர்புடைய பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் டி.ஜி.டி., படிப்பையும் தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: நேர்காணல் மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03.03.2017 மற்றும் 04.03.2017 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்கள் சான்றிதழ்கள் மற்றும் இதர சிறப்புத் தகுதிகளுக்கான சான்றுகளுடன் செல்ல வேண்டும்.விபரங்களுக்கு: http://www.kv1chakeri.org/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !