உள்ளூர் செய்திகள்

மத்திய பல்கலையில் ஆசிரியர் பணி

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் என்பது 2009ல் திருவாரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. கல்வித் துறையில் தரம் மற்றும் முத்திரை பதிக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்டது. இப்பல்கலையில் ஒப்பந்த அடிப்படையில் 6 துணை விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : வரலாறு பிரிவில் 2, மெட்டீரியல்ஸ் சயின்ஸில் 1, மியூசிக் அண்டு பைன் ஆர்ட்சில் 1, மீடியா அண்டு மாஸ் கம்யூனிகேஷனில் 2ம் சேர்த்து மொத்தம் 6 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தேவைகள் : தொடர்புடைய பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இத்துடன் நெட் தேர்வு தேர்ச்சியும் தேவைப்படும். இத்துடன் குறைந்த பட்சம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் தேவைப்படும்.விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை (2017 ஜூலை 12ல்) காலை 09.00 முதல் 10.00க்குள் இந்த பல்கலையில் நடக்கும் நேர்காணலில் பங்கு பெற வேண்டும்.விபரங்களுக்கு : http://cutn.ac.in/wp-content/uploads/T-C-WI-N3-2017.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !