அழைக்கிறது ராணுவ கல்லுாரி
ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பணியாளர் கல்லுாரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்.டி.எஸ்., 38, டிரைவர் 13, கிளர்க் 9, ஸ்டெனோகிராபர் 5, நெட் வொர்க் அட்மின் 4, ஹார்டுவேர் அட்மின் 4, லைன்மேன் 2 உட்பட மொத்தம் 78 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி வயது: 18-27 (12.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) - 643 231 விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100 கடைசிநாள்: 12.6.2026 விவரங்களுக்கு: dssc.gov.in