டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை
151. கீழ்வரும் வாக்கியங்களை ஆராயவும்:1) விஷ்ணு, நாராயணா மற்றும் வாசுதேவனை ஒரே கடவுளாக தைத்ரேய உபநிடத்தில் பாவிக்கப்படுகிறார்கள்2) தர்மம் சரிந்து அதர்மம் உயர்ந்தால் மறு அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்இதில் எது சரி?அ) 1-மட்டும் சரி ஆ) 2- மட்டும் சரி இ) 1 மற்றும் 2-ம் சரி ஈ) 1 மற்றும் 2-ம் சரியில்லை152. சைவ ஆகமம் தொடர்புடையதுஅ) தந்திரங்கள் ஆ)பிரார்த்தனை இ) தியானம் ஈ) எல்லாம் 153. பஞ்சர்வ ஆகமத்தின்படி கடவுள் ஐந்து நிலையில் இருக்கிறார். அவற்றுள் இங்கு சரியாக பொருத்தப்படாத நிலை:அ) பரா : வைகுண்டத்தில் இருக்கும் கடவுள்ஆ) வாசுதேவ வியுஹா : ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள லட்சுமி நாராயணாஇ) விப்பால் : பூமியில் கடவுளின் அவதாரங்கள் ஈ) அனிருத்த வியுஹா : அழித்தலை பார்த்துக்கொள்ளும் கியானா மற்றும் பாலா 154. திருவாசகத்தின் வேறு பெயர்அ) தமிழ் வேதம் ஆ) சைவ வேதம் இ) அ மற்றும் ஆ ஈ) எதுவுமில்லை 155. 'ஸ்தோத்திர ரத்னா'வை எழுதியவர் அ) யமுனா ஆ) ராம மிஷரா இ) ஈஸ்வர முனி ஈ) ராமானுஜர்156. ஆழ்வார்களுடைய 4000 பாடல்களுக்கான விளக்கவுரை முதன் முதலில் எழுதியவர்அ) பெரியவாச்சான்பிள்ளை ஆ) வேதாந்த தேசிகர்இ) நாஞ்சியார் ஈ) குருசேகர்157. பிற்காலத்தில் வைணவ கருத்துகளை மற்ற தத்துவங்களில் இருந்து காக்க தொகுத்து வகைப்படுத்தி வழங்கியவர்கள்1) தேசிகாச்சாரி 2) நாதமுனி3) யமுனாச்சாரி 4) ராமானுஜர்இதில் சரியான ஒன்றை தேர்ந்தெடுஅ) இவை அனைத்தும் ஆ) 1. 2 மற்றும் 3இ) 3 மட்டும் ஈ) 4 மட்டும்158. i. சைவக் கூற்றுப்படி மாயை பொருள் காரணமாக அமைகிறதுii. எனவே கடவுள் (பதி) உலகத்தைப் படைக்கும் ஆற்றல் உடையவர் மேற்கண்ட தொடர்களிலிருந்து கீழ்காணும் சரியான விடையைத் தேர்ந்தெடு அ) i மற்றும் ii சரி ஆ) i சரி ஆனால் ii தவறுஇ) i தவறு ஆனால் ii சரி ஈ) இரண்டும் தவறு 159. ஆணவ மலம் அநாதிதொட்டே ஆன்மாவைப் பற்றி நிற்கிறது என்று சைவம் கூறுகிறது. அதனால் எதை இவ்வாறு குறிப்பிடலாம் ?1) சகச மலம் 2) மூல மலம் 3) கன்ம மலம் 4) மாய மலம் இதன் அடிப்படையில் கீழ்கண்டவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுஅ) 1-ம் மற்றும் 2-ம் சரி ஆ) 1-ம் மற்றும் 4-ம் சரிஇ) 1-ம் மற்றும் 3-ம் சரி ஈ) அனைத்தும் சரி160. கீதை போதிப்பது1) தனி மனித அற இயல் 2) சமுதாய அற இயல்3) செயல்களை துறத்தல் 4) வாழ்க்கையை துறத்தல்கீழ்க்கண்டவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுஅ)1-மட்டும் சரி ஆ)2-மட்டும் சரி இ) 3-ம் 4-ம் சரி ஈ) அனைத்தும் சரி 161. பொருத்துக : அ) சைவ சித்தாந்தம் 1) பக்திஆ) வைணவம் 2) ஞானம்இ) மீமாம்சம் 3) கடமைஈ) கீதை 4) யாகங்கள்குறியீடுகள்அ ஆ இ ஈஅ) 2 1 4 3ஆ) 2 3 4 1இ) 1 3 4 2ஈ) 4 3 2 1162. வேதங்களின் பல்வேறு பகுதிகளின் வரிசை முறையே -----------அ) பிராமணங்கள், ஆரண்யங்கள், மந்திரங்கள், உபநிடதங்கள்ஆ) மந்திரங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்இ) உபநிடதங்கள், மந்திரங்கள், ஆரண்யங்கள், பிராமணங்கள்ஈ) பிராமணங்கள், மந்திரங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள்163. மத்வர் ஆதரிப்பது:அ) சத்காரிய வாதம் ஆ) அசத் காரிய வாதம்இ) சதசத்காரிய வாதம் ஈ) விவாத வாதம்164. சைவ சித்தாந்த கொள்கைப்படி உயிர் அநாதிதொட்டே கட்டுண்டு அல்லற்படுவதற்கு காரணம்அ) மாய மலம் ஆ) கர்ம மலம் இ)ஆணவ மலம் ஈ) அனைத்தும் 151.இ 152.அ 153. ஈ 154.இ 155.அ 156.அ 157.ஈ 158.அ 159.இ 160.அ 161.அ 162.ஆ 163. இ 164.இதொடரும்