உள்ளூர் செய்திகள்

டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் அளிக்கும் பயிற்சி வாய்ப்பு

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனிசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் நமது ராணுவம் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பாகும். பெருமைக்குரிய டி.ஆர்.டி.ஓ., நிறுவனம் தற்சமயம் அங்கு காலியாக இருக்கும் இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னி காலியிடங்கள் 90ம், டிப்ளமோ அப்ரென்டிஸ் டிரெய்னி இடங்கள் 30ம், ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவில் 30ம் என மொத்தம் 150 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.காலியிடங்கள் விபரம் : கிராஜூவேட் அப்ரென்டிஸ் டிரெய்னி காலியிடங்களுக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் மெக்கானிக்கல்/புரொடக்சன்/ இன்டஸ்ட்ரியல் புரொடக்சன் பிரிவில் 35ம், ஏரோ-மெக்கானிக்கலில் 20ம், எலக்ட்ரிகல்/ எலக்ட்ரானிக்ஸ் / கம்யூனிகேஷன்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன்/ மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் 15ம், கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜியில் 15ம், மெட்டலர்ஜியில் 3ம், சிவிலில் 2ம் சேர்த்து மொத்தம் 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ அப்ரென்டிஸ் டிரெய்னி இடங்களில் மெக்கானிக்கல்/புரொடக்சன்/டூல் அண்டு டை டிசைனில் 15ம், எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேஷன்/இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 10ம், கம்ப்யூட்டர் சயின்ஸில் 3ம், மெட்டலர்ஜியில் 2ம் காலியிடங்கள் உள்ளன. ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ் டிரெய்னியில் பிட்டர் மற்றும் டர்னரில் தலா 4, எலக்ட்ரீசியன், வெல்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், கம்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க் மெயிண்டனென்ஸ், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் ஆகியவற்றில் தலா 2ம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்டு புரொகிராமிங் அஸிஸ்டென்டில் 8ம் காலியாக உள்ளன.கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு முறையில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்கு பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும்.கடைசி நாள் : 2017 செப்., 5. விபரங்களுக்கு : www.drdo.gov.in/drdo/whatsnew/app-gtre.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !