அழைக்கிறது உர நிறுவனம்
திருவனந்தபுரத்தில் உள்ள உரம், ரசாயனம் நிறுவனத்தில் (பாக்ட்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: டெக்னீசியன் 56, சீனியர் மானேஜர் 4, உதவி மானேஜர் 2 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: 23.1.2024 அடிப்படையில் டெக்னீசியன், உதவி மானேஜர் 35, மற்ற பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு மையம்: கொச்சிவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: மானேஜர் பணிகளுக்கு ரூ. 1180, மற்ற பணிக்கு ரூ. 590. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 23.1.2024விபரங்களுக்கு: fact.co.in