உள்ளூர் செய்திகள்

மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தில் (ஆர்.இ.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: இன்ஜினியரிங் பிரிவில் 67, நிதி, அக்கவுன்ட்ஸ் பிரிவில் 33, ஐ.டி., 2, கம்பெனி செக்ரட்ரிஷிப் பிரிவில் 6, சட்டம் 8, கார்ப்பரேட் கம்யூனிகேசன் 2, கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி 2, செட்ரட்ரியல் 6 உட்பட மொத்தம் 127 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: 9.2.2024 அடிப்படையில் வயது உச்சவரம்பு 33 முதல் 48 வரை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 9.2.2024விபரங்களுக்கு: recindia.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !