வனத்துறை அதிகாரியாக வாய்ப்பு
இந்திய வனத்துறை சர்வீசஸ் (ஐ.எப்.எஸ்.,) பணியில் 150 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.8.2024 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.எத்தனை முறை: பொதுப்பிரிவினர் 6, ஓ.பி.சி., பிரிவினர் 9 முறை எழுத முடியும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இதில் வரம்பு இல்லை.தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுதேர்வு மையம்: பிரிலிமினரி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுாரில் நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் நடைபெறும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.3.2024விவரங்களுக்கு: www.upsc.gov.in