உள்ளூர் செய்திகள்

இ.பி.எப்.ஓ., அமைப்பில் உதவியாளர் பணி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.,) காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தனி உதவியாளர் பிரிவில் 323 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, நிமிடத்துக்கு 120 வார்த்தை தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.வயது: 27.3.2024 அடிப்படையில் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், புதுச்சேரி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 27.3.2024 மாலை 6:00 மணிவிவரங்களுக்கு: upsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !