அழைக்கிறது தபால் வங்கி
தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியன் போஸ்ட் ஆப் பேமன்ட் பேங்க்கில்(ஐ.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: எக்சிகியூட்டிவ் பிரிவில் உ.பி., 11, குஜராத் 8, பீஹார் 5, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் தலா 4, ம.பி., 3, தமிழகம், மஹாராஷ்டிரா தலா 2, டில்லி, ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா தலா 1 என மொத்தம் 47 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ., (விற்பனை / மார்க்கெட்டிங்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வயது: 1.3.2024 அடிப்படையில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150கடைசிநாள்: 5.4.2024விவரங்களுக்கு: ippbonline.com