உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு பள்ளியில் 1377 காலியிடங்கள்

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மெஸ் உதவியாளர் 442, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 360, எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் 128, ஆய்வக உதவியாளர் 161, நர்ஸ் 121, கேட்டரிங் சூப்பர்வைசர் 78, ஸ்டெனோ 23, எம்.டி.எஸ்., 19, ஆடிட் அசிஸ்டென்ட் 12, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 5, ஜூனியர் டிரான்ஸ்லேசன் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 1377 இடங்கள் உள்ளன.வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: நர்ஸ் பணிக்கு ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. மற்ற பதவிகளுக்கு ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.கடைசிநாள்: 30.4.2024விவரங்களுக்கு: navodaya.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !