உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது செயில் நிறுவனம்

பொதுத்துறையை சேர்ந்த இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: டெக்னீசியன் டிரைய்னி 54 (அட்டனென்ட் 34, எலக்ட்ரிக்கல் 15, சுரங்கம் 5), டெக்னீசியன் பாய்லர் 20, மெடிக்கல் ஆபிசர் 9, அசிஸ்டென்ட் மேனேஜர் (சேப்டி) 10, சீனியர் மெடிக்கல் ஆபிசர் 3, மைனிங் போர்மேன் 3, மைனிங் மேட் 3 உட்பட மொத்தம் 108 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.இ.,/ பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,என பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபிசர் 34, அசிஸ்டென்ட் மேனேஜர் 30, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100கடைசிநாள்: 7.5.2024விவரங்களுக்கு: sail.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !