உள்ளூர் செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு

ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிர்வாக அதிகாரி பிரிவில் அக்கவுன்ட்ஸ் 20, இன்ஜினியர்ஸ்15, ஆக்சுரியல் 5, இன்ஜினியர்ஸ் (ஐ.டி.,) 20, மெடிக்கல் ஆபிசர் 20, சட்டம் 20 என மொத்தம் 100 காலியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 31.12.2023 அடிப்படையில் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு.தேர்வு மையம்: சென்னை, கோவை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 12.4.2024விவரங்களுக்கு: orientalinsurance.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !