உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் குரூப் - I அதிகாரியாக ஆசையா

தமிழக அரசில் 'குரூப் - I' பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.அசிஸ்டென்ட் கமிஷனர் 21, மாவட்ட கல்வி அதிகாரி 8 என மொத்தம் 29 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, பி.எல்., அல்லது ஐந்து வருட பி.எல்., முடித்திருக்க வேண்டும். இதனுடன் ஓராண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் தேவைப்படும். மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு முதுநிலை டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது: 1.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் கமிஷனர் 34, மாவட்ட கல்வி அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: பிரிலிமினரி தேர்வுக்கு ரூ. 100, மெயின் தேர்வுக்கு ரூ. 200.கடைசிநாள்: 22.5.2024விவரங்களுக்கு: tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !