உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் 312 மருத்துவப் பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.உதவி பேராசிரியர் 132 (பொது மருத்துவம், ஆப்பரேஷன்,நெப்ராலஜி, குழந்தை மருத்துவம்)துணை தொல்லியல் ஆய்வு கண்காணிப்பாளர் 67, துணை இயக்குனர் 50 (தோட்டக்கலை, வேதியியல், உணவு, தோல், மெட்டல்), மத்திய உளவுத்துறை துணை அதிகாரி 9 உட்பட 312 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பேராசிரியர் பணிக்கு எம்.பி.பி.எஸ்., பணி அனுபவம், மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: பேராசிரியர் பணிக்கு 40, துணை இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 13.6.2024விவரங்களுக்கு: upsconline.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !