உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது துணை ராணுவம்

துணை ராணுவத்தை சேர்ந்த பி.எஸ்.எப்., எனும் எல்லை பாதுகாப்பு படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குரூப் 'பி' பிரிவில் எஸ்.ஐ., (வெகிக்கிள் மெக்கானிக்) 3, குரூப் 'சி' பிரிவில் கான்ஸ்டபிள் (வெகிக்கிள் மெக்கானிக் 22, பிட்டர் 4, கார்பென்டர்2) உட்பட மொத்தம் 37 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எஸ்.ஐ., பணிக்கு ஆட்டோமொபைல் / மெக்கானிக்கல்பிரிவில் டிப்ளமோ, கான்ஸ்டபிள் பணிக்கு ஐ.டி.ஐ., படிப்புடன் மூன்றாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயது: 17.6.2024 அடிப்படையில் எஸ்.ஐ., 30, கான்ஸ்டபிள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: எஸ்.ஐ., பணிக்கு ரூ. 247.20, கான்ஸ்டபிள் பணிக்கு ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 17.6.2024விவரங்களுக்கு: rectt.bsf.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !