உள்ளூர் செய்திகள்

பருத்தி நிறுவனத்தில் வாய்ப்பு

இந்திய பருத்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: ஜூனியர் கம்ர்சியல் எக்சிகியூட்டிவ் 120, ஜூனியர் அசிஸ்டென்ட் 61 (ஜெனரல் 20, அக்கவுன்ட்ஸ் 40, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 1), மேனேஜ்மென்ட் டிரைய்னி 31 (மார்க்கெட்டிங் 11, அக்கவுன்ட்ஸ் 20) , அசிஸ்டென்ட் மேனேஜர் 2 என மொத்தம் 214 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: எக்சிகியூட்டிவ், ஜூனியர் அசிஸ்டென்ட் ஜெனரல், மேனேஜ்மென்ட் டிரைய்னி மார்க்கெட்டிங் பணிக்கு அக்ரிகல்சர் டிகிரி, மற்ற பணிகளுக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.வயது: 2.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் மேனேஜர் 18 - 32, மற்ற பணிக்கு 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 2.7.2024விவரங்களுக்கு: cotcorp.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !