நிலக்கரி நிறுவனத்தில் வேலை
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்மசிஸ்ட் 15, தியேட்டர் அசிஸ்டென்ட் 2, ஸ்பீச் தெரபிஸ்ட் 1, டென்டல் மெக்கானிக் 1 உட்பட மொத்தம் 21 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.பார்ம்., வயது: 18-30 (1.2.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 486. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 256. கடைசிநாள்: 10.3.2026 விவரங்களுக்கு: nlcindia.in