உள்ளூர் செய்திகள்

இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

தோட்டக்கலை ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்டிகல்சர் ரிசர்ச் (ஐ.ஐ.எச்.ஆர்.,) என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் தற்சமயம் காலியாக உள்ள 70 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: யங் புரொபஷனல் பிரிவு 1ல் 44 இடங்களும், யங் புரொபஷனல் பிரிவு 2ல் 25 இடங்களும், சீனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 1ம் சேர்த்து மொத்தம் 70 காலியிடங்கள் உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: யங் புரொபஷனல் பிரிவு 1 மற்றும் சீனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஹார்டிகல்சர் பிரிவில் பி.எஸ்சி., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். யங் புரொபஷனல் பிரிவு 2க்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி.,யில் ஹார்டிகல்சர் அல்லது எம்.சி.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இதன் இணையதளத்திலிருந்து அறியவும்.தேர்ச்சி முறை: நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க: தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண் டும். Principal Investigator/ Co-Principal Investigator,INDIAN INSTITUTE OF HORTI CULTURE RESEARCH, BENGALURU.விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 2017 மே 30. விபரங்களுக்கு: http://www.iihr.ernet.in/system/files/temporary%20posts.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !