உள்ளூர் செய்திகள்

ஆயுத தொழிற்சாலையில் பணி

ராணுவத்துக்கான சென்சார், தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிக்கும் இந்திய ஆப்டெல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஜூனியர் புராஜக்ட் இன்ஜினியர்' பிரிவில் மெக்கானிக்கல் 37, எலக்ட்ரானிக்ஸ் 26, ஆப்டிக்ஸ் 7, எலக்ட்ரிக்கல் 6, கெமிக்கல் 1 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி., வயது: 18 - 37 (3.4.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழக்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Chairman & Managing Director, India Optel Limited, OFILDD Campus Raipur,Dehradun (Uttrakhand) - 248 008. கடைசிநாள்: 3.4.2026 விவரங்களுக்கு: ddpdoo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !