பெரிய வெங்காயம் சாகுபடிக்கு உதவிகள்
உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை மேற்கொள்ள புதிய பரப்பு அதிகரித்திட நடப்பு ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு எக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ.12,000 மான்யமாக தர உள்ளது. தோட்டக்கலைத்துறை விலை வீழ்ச்சி இல்லாத காய்கறி வரிசையில் ஓரளவு நல்ல விலை தர உதவும் பெரிய வெங்காயம் ஒரு காலத்தில் சாகுபடியில் உள்ள பயிர் தான்.எங்கெல்லாம் வெங்காயம் விளைகிறதோ அங்கு இந்த வெங்காயம் ஏன்? வெள்ளை வெங்காயம் கூட சாகுபடி செய்யலாம். மருத்துவ குணம் மிகுந்தது வெள்ளை வெங்காயம். புதுப்புது உத்திகளால் தான் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும். இதற்கு தன் சாகுபடி பரப்பில் ஒரு பகுதியை பெரிய வெங்காயத்துக்கு, ஒதுக்கி ஊடுபயிராக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகளை நட்டு வரவினை அதிகரித்து ஒரு எக்டரில் 16 டன் வெங்காயம் வரை விவசாயிகள் பெற்றுள்ளனர். உடுமலையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்திட விரும்பும் விவசாயிகள் தனது பெயரை பதிவு செய்யலாம்.வயது அதிகம் உள்ளது என்று தவறான கற்பனை செய்யாமல் இடைவெளியை அதிகரித்து இதர காய்கறிப் பயிர்கள் பொரியல் தட்டை, குத்து அவரை, கொத்தவரை, வெண்டை, பீட்ரூட் மற்றும் கீரை வகைகள் கலந்து அல்லது ஊடு பயிராக தென்னந்தோப்பில் கூட பெரிய வெங்காயம் சாகுபடி முறையாக மேற்கொள்ளலாம். ஊடுபயிராக இதர பயிர்களின் இடைவெளியில் வெங்காயம் சாகுபடி மூலம் பலவித பூச்சிகள் பெருகாமல் தடுக்கலாம். முதலில் கூடுதலாக முதலீடு செய்து உயிர் உரங்கள் மண்புழு உரம் முதலியன இட்டு மண்ணைப்பேணி தரமான மதிப்பு அதிகம் உடைய (இயற்கை விவசாய உத்திகள் மூலம்) காய்கறி உற்பத்திக்கு தற்போது தோட்டக்கலைத்துறை உதவி வருகிறது.ஒருங்கிணைந்த உர உபயோகம் மான்யமாக ரூ.1200 வழங்கி அதற்கு இடு பொருட்களான பாஸ்போ பேக்டீரியா, அசோஸ் பைரில்லம் தரப்படும். இயற்கை விவசாயிகள் பதிவு செய்திட விரும்புபவர்கள் குழுக்களாக பதிவு செய்தால் அநேக சலுகைகள் காத்திருப்பதும் விளைபொருளை சிறப்பு விலைக்கும் விற்கலாம். வங்கிகளில் கடன்பெற்று கால்நடை செல்வங்களையும் அதிகரித்து வேலிகளில் லாபம் தரும் பலா, மா, கொய்யா, இலவன், புளி, நாவல், முள் இல்லா மூங்கில் முதலிய மரங்கள் நட்டு நல்ல காசு பார்க்கலாம். மேலும் விவரம் பெற 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.- டாக்டர் பா.இளங்கோவன்,கோவை-641 041.