உள்ளூர் செய்திகள்

நீர்மட்டம் உயர செய்யும் பண்ணைக் குட்டைகள்

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை அபாய கட்டத்தை எட்டி வருகிறது. அவற்றை குறைப்பதற்கு பல நீர் மேலாண்மை உத்திகளை பயன்படுத்தப்படுகிறது. எனினும் நீர் மேலாண்மை உத்தி என்றாலே மக்கள் மனக்கண் முன் தோன்றும் முதல் சிந்தனை மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் தான். காரணம் நீர் மேலாண்மையின் முக்கிய அம்சம் மழை நீர் அறுவடை. நிலத்தில் விழும் மழை நீரை முழுவதையும் சேகரிக்க கிராமங்களில் தடுப்பணைகள் கட்டுவது, மலைப்பகுதிகளில் கம்பிவேலி தடுப்பணைகள் கட்டுவது, விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து மற்றும் ஆழ்குழாய் கிணற்றிற்கு நீர் மட்டம் அதிகரிக்க செரிவூட்டு குழாய்கள் அமைப்பது, என பல உத்திகள் உள்ளன.அதில் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்திக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பெரிதும் பயன்படுவது அவரவர் நிலங்களில் அமைக்கும் பண்ணை குட்டைகளே. இவற்றை அமைப்பதற்கு அரசு 50 சதவீத மானியம் வழங்குவதன் மூலம் விவசாயிகள் இந்த நீர் மேலாண்மை உத்தியை பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதன் மூலம் மழை நீரை பல்வேறு பகுதிகளிலிருந்து சேமிப்பது மட்டுமல்லாமல், அவை வீணாகாமல் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் மழையளவு குறையும் சமயங்களில் அல்லது வறட்சியான சூழ்நிலைகளிலோ பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்த தண்ணீரை சாகுபடி பயிர்களில் முக்கிய வளர்ச்சி காலங்களில் நீர் பாசனம் செய்து மகசூல் பெறலாகம்.- த. விவேகானந்தன், துணை இயக்குனர்நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை.94439 90964


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !