உள்ளூர் செய்திகள்

கூடுதல் சுவையுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பலா

பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும், 'எவியார்க்' ரக பலா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் பலா சாகுபடி செய்துள்ளேன். இது, மூன்று ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும், குறுகிய கால பழ வகையாகும்.இந்த ரக பலா துவக்கத்தில், 10 -- 25 கிலோ வரையில் மகசூல் கிடைக்கும். குறிப்பாக, பழ மரங்களை சாகுபடி செய்யும் போது, தண்ணீர் தேங்காத மேட்டுப் பகுதியான நிலத்தில் சாகுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,94441 20032.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !