உள்ளூர் செய்திகள்

குஜராத் ரக வேர்க்கடலை களிமண்ணில் சாகுபடி

குஜராத் ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த பி.சந்திரசேகரன் கூறியதாவது: பலவித ரக வேர்க்கடலை சாகுபடி செய்து வருகிறேன். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜி-9 ரக வேர்க்கடலையை, கார்த்திகை மாத இறுதியில் சாகுபடி செய்ய உள்ளேன். நாம் விளைவிக்கும் வேர்க்கடலை ரகங்களை காட்டிலும், ஜி-9 ரக வேர்க்கடலை கூடுதல் மகசூல் கொடுக்க வல்லது என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, ஜி-7 ரக வேர்க்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டியுள்ளேன். தற்போது, ஜி-9 ரக வேர்க்கடலை பிற ரகங்களை காட்டிலும் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய ரகமாகும். ஒரு ஏக்கருக்கு, 32 மூட்டைகள் வரையிலும் மகசூல் கொடுக்கும் என, ஜி-9 ரக வேர்க்கடலை சாகுபடி செய்த முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர். மற்ற வேர்க்கடலை ஒரு ஏக்கருக்கு, 18 - 20 மூட்டைகள் வரையிலும் மகசூல் கிடைக்கும். நம்ம ஊர் களிமண் கலந்த சவுடு மண்ணில் ஜி9 ரக வேர்க்கடலை சாகுபடி செய்யும் பணியை துவக்கி உள்ளேன். இனி தான் மகசூல் குறித்து தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.சந்திரசேகரன், 88388 85322


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !