கூடுதல் மகசூலுக்கு கேரளா கோசேரி மாம்பழம்
கோசேரி ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், கேரளா மாநிலத்தில் விளையும், கோசேரி ரக மாம்பழம் மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். இந்த ரக பழ மரங்களை நடும்போது, தண்ணீர் தேங்காத மேட்டுப் பகுதிகளில் நட வேண்டும். அப்போது,தான் செடிகளின் சேதம் தவிர்க்கப்படும். மா விளைச்சலும் நன்றாக இருக்கும்.குறிப்பாக, களர் உவர் மண் நிலத்தில், பழ வகை மரங்களை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். இந்த ரக மாம்பழம், 800 கிராம் வரையில் இருக்கும். மகசூல் முடிந்த பின், மரக்கிளைகளை கவாத்து செய்து கொள்ள வேண்டும்.அப்போது தான் அடுத்த மகசூல் வரும் போது, கூடுதல் மகசூல் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா,72005 14168.