மரத்துாளில் சாகுபடியாகும் கேசவர்த்தினி
மரத்துாளில், கேசவர்த்தினி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த எம்.தனஞ்செயன் கூறியதாவது:வாழை, கொய்யா உள்ளிட்ட பலவித பழச் செடிகளை நட்டுள்ளேன். இதன் வாயிலாக ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.இதன் நடுவே, மூலிகை செடிகள் மற்றும் நறுமணம் தரும் பூ செடிகளை நட்டுள்ளேன். அந்த வரிசையில், மரத்துாளில் கேசவர்த்தினி செடிகளை நட்டுள்ளேன். இந்த செடி, படரக்கூடிய தன்மை உடையது.கேசவர்த்தினி செடியை, ஒருமுறை நட்டுவிட்டால் போதும், படர்ந்து கொண்டே இருக்கும். இந்த செடிகளை பிற பூச்செடிகளை போல புதிதாக வாங்கி நட வேண்டியதில்லை.ஒரு செடியில், பல லட்சம் செடிகளை உற்பத்தி செய்யலாம். முடி உதிர்வு மற்றும் இள நரைக்கு ஏற்ற செடிஎன்பதால், சந்தையில் வாங்குவதற்கு யாருக்கும் தயக்கம் இருப்பதில்லை.இதை, சாகுபடி செய்து மதிப்பு கூட்டியபொருளாக தயாரித்து விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் ஈட்டக் கூடிய லாபகரமான சாகுபடியாக இருக்கும். இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,88257 46684.